ஓ பன்னீர்செல்வத்துடன் முதல்வர் மருமகன் சபரீசன் சந்திக்கும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஓபிஎஸ் தரப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு நூற்றுக்கணக்கான வாகனங்களில் தொண்டர்கள் பயணம்!
அதிமுகவின் பொதுச் செயலாளார் பதவியை பிடிக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு கைகொடுத்த முதல் அஸ்திவாரம், ஓ.பன்னீர்செல்வம்
ஆதரவாளர் என்றது தான். ஆனால் அதற்கேற்றார் போல், திமுக அரசை பலமுறை புகழ்ந்து பேசி இருக்கிறார் ஒபிஎஸ். தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்த போதும், அதேபோல் பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாகக் கொண்டாடப்பட்டு, பள்ளி கல்லூரிகளில் கவிதைப் போட்டி நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்த போதும் அதை வரவேற்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல் சட்டமன்றத்திலேயே
கலைஞரை புகழ்ந்து பேசியது, எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றன. ஏனென்றால் எம்ஜிஆரை தலைவராக ஏற்று, அதிமுகவில் சேர்ந்தவர்கள் எப்போதும் கலைஞரை பொதுவெளியில் புகழ்ந்ததில்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தபோது, அதை சட்டப்பேரவையில் புகழ்ந்து பேசியது எடப்பாடி பழனிச்சாமிக்கும், அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திமுகவின் பி டீமாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என கடுமையாக விமர்சித்து, அடுத்து கட்சியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தநிலையில் ஓ பன்னீர்செல்வம், முதல்வரின் மருகன் சபரீசனை இன்று சந்துள்ளது இணைய வெளியில் பேசு பொருளாகியுள்ளது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் IPL போட்டியை காண வந்தபோது இருவரும் சந்தித்து பேசிக் கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
‘பூனைக்குட்டி வெளியே வந்தது.. சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு’ என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார். அதேபோல் CSK அணியின் கேப்டனாக தன்னை மாற்றுமாறு சிஎஸ்கே நிறுவனத்துடன் ஓபிஎஸ் சண்டையிட்டுக் கொண்டுள்ளார் எனவும் பங்கம் செய்துள்ளார் ஜெயக்குமார். இப்படியாக இணையதளத்தில் அந்த வீடியோ பல வகைகளிலும் ட்ரெண்டாகி வருகிறது.
சென்னையில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளை காண முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது சென்று பார்க்கிறார். அமைச்சர் உதயநிதி அமைச்சர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி என்றால் தவறாமல் ஆஜராகிவிடுவார்கள். இந்தநிலையில் சென்னையில் நடைபெற்ற போட்டியை பார்க்க வந்த நிலையில் ஓபிஎஸ் பார்க்க வந்ததால், சபரீசன் அவரை சந்தித்து பேசியுள்ளார்.