இலங்கை தொலைக்காட்சி நாடகம் மற்றும் திரைப்பட இயக்குநர் ஒருவரைக் கடத்திச்சென்று
தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 5 பேரை பதுளை வெலிமடை பொலிஸார்
கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (05.05.2023) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
51 வயதுடைய இந்த திரைப்பட இயக்குநர் காமினி பிரியந்த, வெலிமடையில் நடந்து சென்று கொண்டிருந்த
போது வேன் வாகனம் ஒன்றில் வந்த நான்கு பேர் அவரை கடத்திச் சென்றுள்ளனர்.
தனிப்பட்ட முறுகல்
இதன் பின்னர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தை அடுத்து ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கடத்தலுக்குப்
பயன்படுத்தப்பட்ட வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
வெலிமடை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட முறுகலே கடத்தல்
மற்றும் தாக்குதலுக்கான காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.