மீரட்: உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் தயாரித்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
உ.பி.,யின் கிதார் என்ற இடத்தில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சப்- – இன்ஸ்பெக்டர் சத்யேந்திர குமார் தலைமையில் போலீசார் கிதாரின் இஷாப்பூர் அருகே கரும்பு வயலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அங்கு இருவர், சிறு தொழிற்சாலை அமைத்து, கைத்துப்பாக்கிகள், துப்பாக்கிக் குண்டுகள் தயாரித்துக் கொண்டிருந்தனர்.
இருவரையும் கைது செய்த போலீசார், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படுத்திய கருவிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ஷகீல் மற்றும் பூரே ஆகிய இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement