சென்னை : நடிகை சமந்தா நடித்த சாகுந்தலம் திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
காளிதாசரால் எழுதப்பட்ட சாகுந்தலம் என்ற புராண காதல் கதையை படமாக்கியிருக்கிறார் தெலுங்கு இயக்குநர் குணசேகர்.
இதில் சாகுந்தலையாக சமந்தாவும் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடித்துள்ளனர்.
சமந்தா : மேனகா, விஸ்வாமித்ரரின் காதலின் சாட்சியாக பிறக்கிறாள் சகுந்தலா. தன் தவத்தைக் கலைக்க இந்திரனால் மேனகை வந்ததை தெரிந்து கொண்ட விஸ்வாமித்திரர் மேனகையை விட்டுச் சென்றுவிடுகிறார். இதனால், மேனகை தனது குழந்தையை கன்வ முனிவரின் ஆசிரமம் அருகே விட்டுச் செல்கிறார். அந்த குழந்தைக்கு சாகுந்தலா என பெயர் வைத்து சொந்த மகள் போல வளர்த்து வருகிறார் கன்வ முனிவர்.
சாகுந்தலா : வளர்ந்து பருவ மங்கையான சாகுந்தலா, ஆசிரமத்துக்கு வரும் ஹஸ்தினாபுர அரசர் துஷ்யந்தனை காதலிக்கிறார். இதையடுத்து, இருவரும் காந்தர்வ திருமணம் செய்துகொண்டு, சாகுந்தலா குழந்தைக்குத் தாயாகிறார். ஆனால், முனிவரின் சாபத்தால், துஷ்யந்தன், சாகுந்தலையை மறந்துவிட மறந்த காதலனை நினைத்து உருகுகிறாள் சகுந்தலா.
பல கோடி நஷ்டம் : 3டி வடிவில் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியானது. சுமார் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வெறும் 7 கோடியை மட்டுமே வசூலித்து, தயாரிப்பாளர் தில் ராஜூக்கு 22 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஓடிடி ரிலீஸ் தேதி : ஏப்ரல 14ந் தேதி திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் தியேட்டருக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மே 12ந் தேதி அமேசான் ஃபிரைம் தளத்தில் வெளியாக உள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட சமந்தா பேன்ஸ் டாப் நடிகையான சமந்தாவுக்கே இந்த நிலைமையா என கேள்வி கேட்டு வருகின்றனர்.