சிதம்பரம் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தை திருமணம் நடைபெறுவதாக எழுந்த புகாரில் சிறுமிகளிடம் இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனை நடைபெற்றதாகவும் அதனால் அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து தமிழக காவல் துறை தலைவர் சைலேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் “சிறுமிகளுக்கு திருமணம் செய்த விவகாரத்தில் அவர்களின் சட்ட ஆலோசகரின் ஒப்புதலுடன் சிறுமிகள் பரிசோதனைக்கு ஆஜர் படுத்தப்பட்டனர். நான்கு சிறுமிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் இருவர் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு ஆஜரானார்கள், அவர்களுக்கு முறையான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. […]