சீமானின் போராட்டம் கோமாளித்தனமானது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.
கள்’ளு என்பது வேற..மது வேற..சீமான் பேட்டி!
கேரளாவில் 32 ஆயிரம் இந்து பெண்கள் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு சென்றுள்ளதாக நிருபிக்கப்படாத தகவல்களின் அடிப்படியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சார படம் எனவும், அந்த படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது எனவும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கேரளா ஸ்டோரி படத்தை திரையிட அனுமதி வழங்க கூடாது என ஏற்கனவே
அரசை
எச்சரித்து இருந்தார்.
‘‘இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு அமைந்த பிறகு கடந்த 9 ஆண்டுகளில் இசுலாமியர்களையும், இசுலாமிய மார்க்கத்தையும் இழிவுப்படுத்தும் திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவருவது எதேச்சையானதாக கருத முடியவில்லை. மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த கலையை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க முயலும் இந்துத்துவவாதிகளின் சூழ்ச்சியாகவே தோன்றுகிறது.
‘காஷ்மீர் பைல்ஸ்’, ‘புர்கா’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘கேரள ஸ்டோரி’ திரைப்படமும் குறிப்பிட்ட ஒரு மதத்தினரையும், அவர்களின் வழிபாட்டு முறையினையும் இழிவுப்படுத்துவது என்பது எவ்வகையிலும் ஏற்க முடியாத கொடுமையாகும். இந்திய ஒன்றியம் முழுவதும் மதவாதிகள் அதிகாரத்தில் கோலொச்சும் நெருக்கடி மிகுந்த சமகாலத்தில் ‘கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழகத்தில் திரையிட திமுக அரசு அனுமதி அளித்தால் போராட்டம் நடத்துவோம்’’ என அறிக்கை வெளியிட்டு எச்சரித்தார்.
இருப்பினும் உளவுத்துறையின் எச்சரிக்கையையும் மீறி, போலீஸ் பாதுகாப்புடன் தமிழகம் முழுவதும் 24 திரையரங்குகளில் கேரளா ஸ்டோரி படம் இன்று வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து திரையரங்குகள் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி இறங்கியது. சென்னை அமைந்தகரை ஸ்கைவாக் வணிகவளாகத்தின் பி.வி.ஆர் திரையரங்கம் முன்பு, சீமான் தலைமையில் இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் சீமானின் போராட்டம் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு தனது ட்விட்டர் பதிவில், ‘‘கேரள ஸ்டோரி திரைப்படத்தை எதிர்த்து திரையரங்கத்தின் முன் ஒரு கோமாளித்தனமான போராட்டத்தை நடத்தி் இருக்கிறது அட்டகத்தி சீமான் கும்பல். திரைப்படத்தை எடுத்த RSS கும்பல் குறித்தோ, படத்தை ஆதரித்து வெளிப்படையாக கருத்து சொன்ன மோடி குறித்தோ எந்த கண்டனமும் எதிர்ப்பும் செய்யவில்லை.
மாறாக, தமிழ்நாடு அரசையும் திராவிட அரசையும் கண்டிப்பதற்கான வாய்ப்பாகத்தான் இதை பயன்படுத்தி உள்ளார் அண்ணன் சீமான். அதாவது,பாஜக கும்பலுக்கு எதிரான எதிர்ப்பை திமுக அரசு பக்கம் திசை திருப்ப முயற்சித்துள்ளார். இதற்கு பெயர்தான் சங்கித்தனம். மோடி குறித்த தீவிரவாத முகத்தை அம்பலப்படுத்திய பிபிசி ஆவணப்படத்தை தடை செய்த பாஜக கும்பலுக்கு எதிராக ஒரு போராட்டத்தைக்கூட முன்னெடுக்க அஞ்சுகிற கட்சி தான் ஓம்தமிழர் கட்சியா?’’ என கடுமையாக விமர்சித்துள்ளார்.