சென்னை: சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 1 லட்சம் பயனாளிகளுக்கு ஓய்வூதி பயன்களை வழங்குவதோடு, புதுமை பெண் மற்றும் நான் முதல்வர்ன திட்டங்களின் கீழ் ஆணைகளும் வழங்கி அசத்த உள்ளார். மேலும் ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற ஈராண்டு சாதனை மலரை வெளியிட்டு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் அவர் திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. இந்த காலக்கட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். மேலும் பல துறைகளில் பணி நியமன ஆணைகளையும் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக தான் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் விழா ஒன்று நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.
அதாவது ‛ஈடில்லா ஆட்சி 2 ஆண்டே சாட்சி’ என்ற தலைப்பில் 2 ஆண்டில் திமுக அரசு செய்த சாதனைகளின் விபரங்கள் அடங்கிய மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார். அதன்பிறகு 2 ஆண்டு திமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைக்கிறார்.
மேலும் 1 லட்சம் பயனாளிகளுக்கு இன்று ஓய்வூதிய பயன்களை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். அதோடு மட்டுமின்றி புதுமை பெண், நான் முதல்வன் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இந்த விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், சென்னை மேயர் பிரியா, ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.