தாயுள்ளத்தோடு அனுமதி கொடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!

கடந்த 10-வருடமாக அனுமதி தரப்படாமல் இருந்த அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுக்க சொந்தமான இடங்களில் தமிழ்த் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடத்த பல்வேறு இடங்களில் அலைந்து படப்பிடிப்பிற்கான அனுமதி வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. அதனை ஒற்றை சாரள முறையில் கொண்டுவர வேண்டும் என்று நமது சங்க தலைவர் என்.ராமசாமி தலைமையில், சங்க நிர்வாகிகள் “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்” அவர்களிடம் கோரிக்கை அளித்தார்கள்.

கடந்த 10-வருட காலமாக படப்பிடிப்பு நடத்த அனுமதி தரப்படாமல் இருந்த அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற தயாரிப்பாளர்கள் சங்க கோரிக்கையை ஏற்று தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து, அரசுக்கு சொந்தமான இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளித்து “தமிழ்நாடு முதலமைச்சர்” உடனடியாக அரசாணை பிறப்பித்துள்ளார். (அரசாணை (160060) எண்.66) சினிமாத்துறைக்கு என்றும் உறுதுணையாக இருந்து வரும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் அனைவரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த அரசாணை பிறப்பிக்க உதவியாக இருந்த விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன்துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலினுக்கும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கும் தமிழ்த் திரையுலகம் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இனி வரும் காலங்களில் தயாரிப்பாளர்கள் அரசுக்கு சொந்தமான இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்குவது சம்பந்தமாக இயக்குநர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில் மட்டுமே ஒற்றை சாளரர் (Single Window System) முறையில் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.” இவ்வாறு இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதித்துள்ள இடங்களின் பட்டியல்: 

1.இராஜாஜி மண்டபம், சென்னை
2. தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள புராதனச் சின்னங்கள்
3. வள்ளுவர் கோட்டம்
4. அரசு மனநலக் காப்பக நிறுவனம்,அரசு மருத்துவமனைகள், அரசுப் பள்ளிகள் மற்றும் பூங்காக்கள், பிரையன்ட் பூங்கா கொடைக்கானல், சிம்ஸ் பூங்கா குன்னூர், தேசியப் பூங்காக்கள், வன விலங்குகள் சரணாலயங்கள், புதிய கொத்தவால் சாவடி, கோயம்பேடு, பனகல் கட்டிடம், சைதாப்பேட்டை ரிப்பன் மாளிகை, தாளமுத்து நடராசன் மாளிகை (எம்.எம்.டி.ஏ கட்டிடம்) தோட்டக்கலை மற்றும் தோட்டப் பயிர்கள் இயக்குனரின் கீழ் உள்ளவை, கால்நடைப் பண்ணை, ஹெலிபேட் உதகமண்டலம். 5.தலைமை வனக்காப்பாளரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஒதுக்கப்பட்ட வனப்பகுதிகள். மீன் துறையின் கீழ் உள்ள மீன் வளர்ச்சிப் பண்ணைகள்
7.கடற்கரைகள், பொது இடங்கள், மெரினா கடற்கரை, பொதுப்பணித் துறையின் தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கட்டடங்கள். 
8.பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டிலுள்ள நீர்ப்பாசனத்திட்ட பகுதிகள்.
9.நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளரின் கட்டுப்பாட்டிலுள்ள நெடுஞ்சாலைகள், தெருக்கள், மற்றும் கட்டடங்கள்.
10.சிறைத்துறை தலைவரின் கட்டுப்பாட்டிலுள்ள சிறைச்சாலைகள், மத்திய சிறைச்சாலைகள் (வெளிப்புறம் மட்டும்)
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.