தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகும் மஹல ஜயவர்தன!


இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹல ஜயவர்தன தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த விளையாட்டுச் சபையின் தலைவர் பதவியை மஹல வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்தும் மூலோபாயங்களை வகுக்கும் நோக்கில் தேசிய விளையாட்டுச் சபை உருவாக்கப்பட்டது.

தேசிய விளையாட்டு சபையிலிருந்து பதவி விலகும் மஹல ஜயவர்தன! | Mahela Jayawardena Sports Commite  

விபரங்கள் வெளியிடப்படவில்லை

கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மஹல விளையாட்டுச் சபையின் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார்.

என்ன காரணத்தினால் பதவி விலகுகின்றார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

விளையாட்டுச் சபையின் தலைவர் மஹல உள்ளிட்ட உறுப்பினர்கள் பதவி விலகுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.