திருவனந்தபுரம்:நள்ளிரவில் ஓடும் பஸ்சில் காதலியை கத்தியால் குத்தி விட்டு தன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கேரள மாநிலம் வயநாடு மூலங்காவை சேர்ந்தவர் சனில் 25. கோட்டயத்தில் ஒரு ஓட்டல் சர்வர். தமிழக எல்லையில் கூடலுாரை சேர்ந்தவர் சீதா 24. ஆலுவாவில் தனியார் நிறுவன ஊழியர். இருவரும் இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் மூணாறு- பெங்களூரு கேரள அரசு பஸ்சில் அங்கமாலியில் சீதா ஏறினார். எடப்பாள் என்ற இடத்தில் சனில் ஏறினார். சீதா இருந்த சீட்டின் அடுத்த சீட்டில் சனில் அமர்ந்தார். இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதால் சனிலை கண்டக்டர் வேறு சீட்டில் மாற்றி அமர வைத்தார். இரவு 11:30 மணிக்கு திடீர் என்று தன்வசம் இருந்த கத்தியால் சீதாவை குத்திய சனில், தனது கழுத்தையும் அறுத்தார்.
இருவரும் திரூராங்காடி அரசு மருத்துவமனையிலும், பின்னர் கோழிக்கோடு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சனில் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement