பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா: மும்பை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

139 ஓட்டங்களுக்கு சுருண்டது மும்பை

 சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்-லின் 49வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிகபட்சமாக நேஹால் வதேரா 51 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 64 ஓட்டங்கள் குவித்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை பொறுத்தவரை மதீன பத்திரன 4 ஓவர்கள் பந்து வீசி 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார், அவரை தொடர்ந்து சாஹர் மற்றும் துஷார்  தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

துரத்தி பிடித்த CSK

இதையடுத்து 140 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் கான்வே மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.

ருதுராஜ் 16 பந்துகளில் 30 ஓட்டங்களும், கான்வே 42 பந்துகளில் 44 ஓட்டங்களும் குவித்தனர்.
பின்னர் வந்த சிவம் துபே-வின் அதிரடி சிக்சர்களால் சென்னை அணி 17.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ஓட்டங்களை குவித்தது.

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணிக்காக 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய மதீன பத்திரன ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

பந்துவீச்சில் மிரட்டிய பத்திரனா: மும்பை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி | Ipl 2023 Csk Won Aganist Mi By 6 Wickets



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.