பிரித்தானியாவின் மன்னராக முடி சூட்டிக் கொண்ட மன்னர் மூன்றாம் சார்லஸுக்கு அவரது மகனான இளவரசர் வில்லியம் முத்தமிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முடிசூட்டிக் கொண்ட மன்னர் சார்லஸ்
கடந்த செப்டம்பரில் மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் இந்த பொறுப்புக்கு வந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற முடிசூட்டு விழாவில், பிரித்தானியாவின் 40வது மன்னராக மூன்றாம் சார்லஸ் வெஸ்ட்மின்ஸ்டர் அபே மடாலயத்தில் முடிசூட்டிக் கொண்டார்.
SkyNews
மன்னர் மூன்றாம் சார்லஸின் தலையில் கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி செயின்ட் எட்வர்ட் மகுடத்தை வைத்து ஆசீர்வதித்தார்.
தந்தைக்கு மரியாதை செய்த இளவரசர் வில்லியம்
பேராயரை தொடர்ந்து பிரித்தானிய அரச வரிசையில் உள்ள வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னர் சார்லஸின் தலையில் வைக்கப்பட்ட கிரிடத்தை தொட்டு மரியாதை செலுத்தினார்.
SkyNews
அத்துடன் தந்தை மற்றும் பிரித்தானியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்ட மன்னர் சார்லஸுக்கு வேல்ஸ் இளவரசர் வில்லியம் முத்தமிட்டு தனது வாழ்த்தினை பரிமாறிக் கொண்டார்.