திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் அனுமதியின்றி, கனிம வளம், மணல், மண் எடுக்க அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. அத்துமீறி மணல் எடுப்பதை தடுக்க, போலீஸ் ரோந்து பணியும், சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மணல் கடத்தும் கும்பலுடன் போலீசார் சிலர் தொடர்பில் இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, பாலக்காடு மாவட்டம், சித்துார், புதுநகரம், கொல்லங்கோடு போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசார் ஏழு பேருக்கு எஸ்.பி., நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
போலீசாரின் நடத்தையில் தவறுகள் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. அவர்களின் மொபைல் போன் தொடர்புகளும் தவறுக்கு உடந்தையாக இருப்பதை உறுதி செய்கின்றன.
அதனால், எஸ்.பி., வழங்கிய நோட்டீசுக்கு பதில் கிடைத்தவுடன், அவர்களுக்கு எதிராக சஸ்பெண்ட் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement