மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம்


பிரித்தானியா மக்களால் பெரிதும் வெறுக்கப்பட்ட பெண்மணியாக கருதப்பட்ட கமிலா பார்க்கர் பவுல்ஸ், இன்று பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவியாக, நாட்டின் மகாரணியாக போற்றப்படும் அளவிற்கு மிக நீண்ட சவாலான பயணத்தை எதிர்கொண்டு வந்துள்ளார். 

டயானாவுடன் திருமணம்

லண்டனில் 1947ம் ஆண்டு ஜூலை 17ம் திகதி மிகவும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தில் பிறந்தவர்  கமிலா.
செல்வந்தர்களின் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் சிறு வயது முதலே இளவரசர் சார்லஸுடன் பேசி பழகும் வாய்ப்பு கமிலாவுக்கு கிடைத்தது.

கமிலா மிகவும் வேடிக்கையாக பேசக்கூடியவர் மற்றும் மகிழ்ச்சியான குணமுடையவர் என்பதால், இளவரசர் சார்லஸ் மற்றும் கமிலா இருவருக்கும் இடையே அன்பு பரவ தொடங்கியது.

மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம் | Queen Consort Camillas Great Journey In BritainSHUTTERSTOCK

இளவரசர் சார்லஸை திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு அரச குடும்ப அந்தஸ்து இல்லாத காரணத்தால், கமிலாவை திருமணம் செய்து கொள்ள இளவரசர் சார்லஸின் பெரிய மாமா லார்ட் மவுண்ட்பேட்டன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

அத்துடன் அரச குடும்பம் தேர்ந்தெடுத்த இளவரசி டயானாவை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் இளவரசர் சார்ல்ஸ்க்கு ஏற்பட்டது.

அதேசமயம் பிரித்தானியாவின் இராணுவ குதிரைப் படையின் அதிகாரி ஆண்ட்ரூ பார்க்கர் பவுல்ஸை கமிலா திருமணம் செய்து கொண்டு குழந்தைகளும் பெற்றுக் கொண்டார்.

மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம் | Queen Consort Camillas Great Journey In BritainGetty

மிகவும் வெறுக்கப்பட்ட பெண்

சில கால இடைவெளியில், கமிலா அவரது கணவரை விட்டு பிரிந்து விட்ட நிலையில், இளவரசர் சார்லஸ் கமிலா இடையிலான உறவு நெருக்கம் ஏற்பட தொடங்கியுள்ளது.

இதன் காரணமாக பிரித்தானிய மக்களால் மிகவும் விரும்பப்பட்ட இளவரசி டயானாவின் திருமண வாழ்க்கை மனவேதனைகள் சூழப்பட்டது.

அப்போது இளவரசி டயானா பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றில், கமிலாவை நேரடியாக குறிப்பிடாமல், இந்த திருமணத்தில் நாங்கள் இருவர் இல்லை மூன்று பேர் இருந்தோம் அதனால் கொஞ்சம் கூட்டமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.]

மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம் | Queen Consort Camillas Great Journey In Britain

இளவரசர் சார்ல்ஸ் மற்றும் இளவரசி டயானா இடையிலான புகைச்சல் அதிகரிக்கவே அரச தம்பதிகள் 1992ல் பிரிந்து, 1996ல் விவாகரத்து செய்து கொண்டனர்.

அதிலிருந்து சில வருடங்களில் டயானா கார் விபத்தில் உயிரிழந்தும் விட்டதால், பிரித்தானிய மக்களால் அதிகம் விரும்பப்பட்ட டயானாவின் இன்னல்களுக்கு கமிலா தான் முக்கிய காரணம் என மக்கள் கமிலாவை வெளிப்படையாக வெறுக்க தொடங்கினர்.

இதற்காக பல்வேறு நேரங்களில் பொது இடங்களில் கமிலா நேரடியாக அவமானப்படுத்தவும் பட்டுள்ளார்.

மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம் | Queen Consort Camillas Great Journey In Britain

இளவரசர் சார்லஸின் மனைவி

பல்வேறு அவமானங்களுக்கு பிறகும், இளவரசர் சார்லஸ் தொடர்ச்சியான முயற்சிகளுக்கும் பிறகும், 2005ம் ஆண்டு கமிலாவை இளவரசர் சார்லஸ் திருமணம் செய்து கொண்டார்.

அத்துடன் தனக்கு பிறகு பட்டத்து ராணி என்ற பெருமையை கமிலா பெறுவார் என்று  மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தனது பிளாட்டினம் ஜூபிலி விழாவில் குறிப்பிட்டு இருந்தார்.

மிகவும் வெறுக்கப்பட்ட பெண் முதல் மகாராணி அந்தஸ்து வரை: சிம்மாசனம் நோக்கிய ராணி கமிலாவின் பயணம் | Queen Consort Camillas Great Journey In BritainGetty

பிரித்தானியா மகாராணி

கமிலா
இந்நிலையில் அனைத்து எதிர்ப்புகளை மறைக்க செய்து, பல்வேறு கடினமான நேரங்களை கடந்து, இன்று பிரித்தானிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள சார்லஸுடன் இணைந்து பிரித்தானியாவின் மகாராணியாக கமிலாவும் முடிசூட்டிக் கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.