முடிவுக்கு வந்த கொரோனா அவசரநிலை: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு!

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா கோர தாண்டவத்தை நிகழ்த்தியது. பாதிப்புகள், உயிரிழப்புகள் ஒரு பக்கம் என்றால் கொரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.

கொரோனா கண்டு பதற்றம் வேண்டாம் – மா.சப்பிரமணியன் நம்பிக்கை

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பொருளாதார அளவில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றனர். தடுப்பூசி கண்டறியப்பட்டு அது பரவலாக்கப்பட்ட பின்னரே இயல்பு நிலைக்கு திரும்ப முடிந்தது. 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா இந்தியா உள்ளிட்ட நாடுகளில் 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பரவியது.

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனாவோடு வாழ்ந்து வரும் நிலையில் ஒரு முக்கிய அறிவிப்பை, உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. அதன் படி கொரோனா பெருந்தொற்றால் உலக அளவில் நிலவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

‘பிரதமர் மோடிக்கு செக்.?’.. ஆஸ்திரேலியாவில் கோயில் சேதம்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்.!
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் உள்ளிட்ட நிபுணர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், “கொரோனா பெருந்தொற்றின் உலகளாவிய சுகாதார அவசரநிலை முடிவுக்கு வந்துவிட்டதாக மிகுந்த நம்பிக்கையுடன் அறிவிக்கிறோம். இவ்வாறு கூறுவதால், கொரோனா அச்சுறுத்தல் முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. கடந்த வாரத்தில் கொரோனா பெருந்தொற்றால் ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒருவர் என்ற எண்ணிக்கையில் உயிரிழப்பு ஏற்பட்டது.

தற்போதும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா பெருந்தொற்றால் போராடிக்கொண்டிருக்கிறார்கள். தொற்றுக்குப் பிறகான பாதிப்பால் லட்சக்கணக்கான மக்கள் சிரமங்களைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த வைரஸ் இங்கே இன்னமும் இருக்கிறது. தொடர்ந்து அது மக்களை கொல்கிறது. இன்னமும் அது ஒரு சவாலாகவே உள்ளது. புதிய வகை வைரஸ்களால் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்துள்ளன.

US woman wins Lottery: வீடு கூட இல்லாத பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்… இப்போ பல கோடிகளுக்கு அதிபதி!

இனியும் மக்கள் இது குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்பதைத் தெரிவிப்பதே தற்போதைய அறிவிப்பின் முக்கிய நோக்கம். மிகுந்த எச்சரிக்கையுடனேயே இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். தேவை எனில் மீண்டும் ஓர் அவசரக் குழுக் கூட்டத்தைக் கூட்ட தயங்க மாட்டோம். கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றை தொடர்ந்து கண்காணித்து வந்த அவசரநிலைக் குழு, மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வந்துள்ளது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படியே, இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என்று கூறினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.