கேரளாவில் 32,000 இந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு இஸ்லாமிய அரசுக்கு ஆதரவுக்கு அளித்ததாக உள்ளிட்ட இந்துக்களுக்கு எதிரான விஷயங்களுக்கு இஸ்லாமியர்களிடம் ஆதரவு நிலையை வெளிப்படுத்தும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இடதுசாரி கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
பிபிசி வெளியிட்ட ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ என்கிற ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்துவிட்டு “லவ் ஜிஹாத்” பிரச்சனையை எழுப்பும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை வெளியிடுவது “சங்கபரிவார் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி” என்று எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
அதே சமயம், இஸ்லாமியர் என்றாலே பயங்கரவாதிகள் போல சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எதிர்ப்பாளர்கள் சலனம் இல்லாமல் பார்த்து அதில் கக்கப்பட்டுள்ள வன்மத்தை எடுத்துரைக்கும் அளவுக்கு பக்குவம்கொண்டவர்களாக மாறியுள்ளனர்.
இஸ்லாமிய மக்களை இழிவுப்படுத்தி இரு பிரிவினர்களுக்கிடையே மோதலை தூண்டும் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என்று உளவுத்துறை முதல் அரசியல்கட்சிகள் வரை எச்சரிக்கை விடுத்தது. ஆனால், அதை மீறி இப்படம் தமிழகத்தில் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை பார்த்து விமர்சனம் செய்துள்ள பிரபல யூ டியூபர் ப்ளூ சட்டை மாறன் பாஜகவையும், மத பிரிவினை வாத அரசியலையும் வெளுத்து வாங்கியுள்ளார்.
ப்ளூ சட்டை ஆவேசம்
அதில் அவர், கருத்து சுதந்திரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ‘தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட வேண்டும் என்று ஒரு க்ரூப் போராடியது. எங்கு பார்த்தாலும் இப்படத்தை பற்றியே விவாதமாக இருந்தது. கடைசியாக இந்த படம் திரைக்கு வந்துவிட்டது ஆனால், கருத்து சுந்தந்திரம் என்பது அந்த க்ரூப்புக்கு மட்டும்தானா அல்லது அனைவருக்கும் பொதுவானதா என்று கேள்வி எழுகிறது.
கருத்து சுதந்திரம்படி, ‘காட்மேன்’ படம் ஏன் இன்னும் திரைக்கு வரவில்லை? பிபிசி ஆவணப்படத்துக்கு இன்னும் ஏன் தடைபட்டு கிடக்கிறது? இந்த படத்தையும் வெளிக்கொண்டுவர ‘தி கேரளா ஸ்டோரி’ வெளிவர போராடியவர்கள் போராடுவார்களா? இங்கு பிரச்சினையே இதுதான்.
இங்கு பிபிசி ஆவணப்படமும் வரட்டும், காட்மேன் படமும் வரட்டும்.. ‘தி கேரளா ஸ்டோரி’ யும் வரட்டும்.. காஷ்மீரி பைல்ஸ்-ம் வரட்டும்.. எல்லாத்தையும் மக்கள் பார்க்கப்படும்.. மக்கள் அனைவரைவிடவும் அறிவாளி.. கடைசியில் மக்கள் ஒரு முடிவுக்கு வரட்டும்…
இஸ்லாமியர்கள் பயந்த மாதிரி ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தால் அவர்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் அது தாற்காலிகமானதுதான்… இந்தியாவில் கொரோனா பரவியதற்கு தப்லிகி ஜமாத் தான் காரணம் என்று பொய் பிரச்சாரம் செய்தார்கள்.. அப்போதைய அரசியலுக்கு அது தேவைப்பட்டது… அதையும் சிலர் நம்பினார்கள்… ஆனால் அதை இப்போது சொன்னால் அப்போது நம்பினவர்கள்கூட நம்பமாட்டார்கள்… அதுபோலத்தான், இந்த மாதிரி அவர்கள் பொய் பிரச்சாரம் செய்வார்கள் பின்னர் கொஞ்ச நாள் கழித்து அவர்களது விஷம பிரச்சாரம் அம்பலமாகிவிடும்.. ‘ கெட்டிக்காரன் புளுகு’ எட்டு நாளைக்குத்தான் என்ற பழைய மொழி உள்ளது.. கெட்டிக்காரர் பொய்யே எட்டு நாளைக்குத்தான் என்றால்.. இவனுங்க முட்டா பயலுக.. இவனுங்க பொய் சொல்லி என்னத்த ஆகபோது? என இதில் உள்ள அரசியலை ப்ளூ சட்டை மாறன் வெளுத்து வாங்கியுள்ளார்.