மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்த ராணியார்: வெளிவராத தகவல்


மறைந்த ராணியார் இரண்டாம் எலிசபெத், தமது பேரன் ஹரியின் மனைவியான மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்ததாக தகவல் ஒன்று தற்போது கசிந்துள்ளது.

ராணியாருடன் மரியாதைக்குரிய உறவு

பொதுவாக, அமைதியான குணம் கொண்ட ராணியார் இரண்டாம் எலிசபெத், எவரிடமும் அதிர்ந்து பேசுவதில்லை என்றே கூறப்படுகிறது.
மேலும், மேகன் மெர்க்கலுக்கும் ராணியாருக்குமான உறவு என்பது தொடர்பிலும் விரிவான தகவல் ஏதும் வெளிவந்ததில்லை.

மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்த ராணியார்: வெளிவராத தகவல் | Meghan Markle Brutal One Word Description @getty

இருப்பினும் மேகன் மெர்க்கல் மற்ற ராஜ குடும்ப உறுப்பினர்களுடன் கொண்டிருந்ததை விட ராணியாருடன் மிகவும் மரியாதைக்குரிய உறவையே கொண்டிருந்துள்ளார் என கூறுகின்றனர்.

ஆனால் உண்மையில் அந்த முன்னாள் நடிகையை ராணியாருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை என்றே அரண்மனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் ஸ்கொட்லாந்தின் பால்மோரல் மாளிகையில் தங்கியிருந்த ராணியார் அதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறுகின்றனர்.

பால்மோரல் மாளிகையில் தமக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அடங்கிய ஒரு சிறு குழுவினருடன் இரவு விருந்துக்கு முன்னர் ஏற்பாடு செய்திருந்த மது அருந்தும் நிகழ்விலேயே மேகன் மெர்க்கல் தொடர்பில் ராணியார் மனம் திறந்துள்ளார்.

ஒரு தீயவளாகவே இருக்கிறாள்

அதில், ஹரி மேகனை சந்தித்தது ஒரு பெருந்துயரம் எனவும் அது தற்போது பேரழிவாக மாறியுள்ளது எனறும் மேகன் தமது பார்வைக்கு ஒரு தீயவளாகவே இருக்கிறாள் என்றும் விவரித்துள்ளார்.

மேகன் மெர்க்கலை ஒற்றை வார்த்தையால் மிக மோசமாக விமர்சித்த ராணியார்: வெளிவராத தகவல் | Meghan Markle Brutal One Word Description @getty

இந்த சம்பவத்திற்கு பின்னர் ராணியார் பால்மோரல் மாளிகையில் இருந்து சடலமாகவே பிரித்தானியாவுக்கு எடுத்துவரப்பட்டார்.
மேலும், மேகன் மெர்க்கல் தமது குடும்பத்தில் ஒரு உறுப்பினராக வந்த பின்னர் தான், தமது பேரன் ஹரி குடும்பத்தில் இருந்து விலகிச் செல்ல நேர்ந்தது எனவும் ராணியார் கவலை தெரிவித்துள்ளார்.

மேகன் மெர்க்கல் தொடர்பில் கடைசியாக ராணியார் தெரிவித்த அந்த கருத்துகள் காரணமாகவே, அவருக்கு பால்மோரல் மாளிகையில் இறுதி மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும் சில அரண்மனை விசுவாசிகள் கூறுகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.