வாத்தை திருடியதாக திட்டிய பக்கத்துவீட்டுக் காரர் – மன வருத்தத்தில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு.!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே குரூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் காசிவேல்-லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் ருத்திரபதி. இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மாட்டுக்கொட்டகையில் உட்கார்ந்திருந்தார்.
அப்போது அங்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாலு-இந்திரா தம்பதியினர், தங்களது வாத்தை கொன்று விட்டு பணத்தை திருடி சென்று விட்டதாக கூறி ருத்திரபதியை திட்டியது மட்டுமில்லாமல் தாக்கியுள்ளனர்.
இதனால் மன வருத்தத்தில் இருந்த ருத்திரபதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தாய் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் மகன் ருத்தரபதியை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ருத்திரபதி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து லட்சுமி, சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ருத்திரபதியை தற்கொலைக்கு தூண்டியதாக பாலு, இந்திரா தம்பதியினரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.