சென்னை : நடிகர் மனோபாலா உயிரிழந்ததற்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து பேசியது இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பல பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா புதன்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
அவரின் இறுதிச்சடங்கு சாலிகிராமத்தில் நடைபெற்றது. இதில், ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்.
இளையராஜா இரங்கல் : மனோபாலா மறைவுக்கு இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவில், என் மீது மரியாதையும் மதிப்பும் வைத்திருந்த நண்பர் நடிகர், இயக்குநர் மனோபாலா காலமான செய்திகேட்டு மிகவும் துயருற்றேன். மனோபாலா ஆரம்பத்தில் பத்திரிகையாளராகவும், பின்னர் இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்து பின்னர் சொந்தமாக டைரக்டரானார்.
எனக்காக காத்திருந்தார் : நான் எப்போது கோடம்பாக்கம் வருவேன் என்று எனக்காக காத்துக்கொண்டு இருந்த இயக்குநர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இளையராஜாவின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், சில நெட்டிசன்ஸ் இரங்கல் செய்தியில் கூட, மனோபால உங்களுக்காக காத்திருந்தார் என்றுதான் பெருமை பேசுவீங்களா என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
கடுமையாக விமர்னம் : இந்த விமர்சனத்திற்கு விளக்கம் அளித்துள்ள வலைப்பேச்சு அந்தணன், நடிகர் மனோபாலா மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து இருந்தார்கள்.அதேபோலத்தான் இளையராஜாவும் இரங்கல் வீடியோ வெளியிட்டார். வார்த்தையில் விஷம்தேடும் கூட்டம் இணையத்தில் எப்போதுமே உண்டு. அந்த கூட்டம் இளையராஜாவின் வார்த்தையில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு மிகவும் கடுமையாக விமர்னம் செய்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் என்ன தவறு : இளையராஜா ஒரு கருத்தை சொல்கிறார் அந்த கருத்தில் இருக்கும் உண்மை தெரிந்து கொள்ளாமல் அவரை விமர்சனம் செய்வது சரியான முறை இல்லை. என் கார் எப்போது கோடம்பாக்கத்திற்கு வரும் என தெரிந்து காத்து இருந்தவர் மானோபாலா என்று தான் சொன்னார். இதில் என்ன தவறு இருக்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு காலத்தில் இளையராஜா கோபுரமாகவே இருந்தார். அது தெரியாதவர்கள் தான் இப்போது அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்.
வார்த்தையில் விஷம் தேடும் கூட்டம் : அந்த வீடியோவில் இளையராஜா பொய் சொல்லவில்லை, அவருக்காக எத்தனை பேர் காத்திருந்தார்கள் என்று தான் பேசி இருக்கிறார். இதன்பின் ஒரு தத்துவமே இருக்கு அதாவது கோடம்பாக்கத்தில் எனக்காக காத்திருந்த ஒரு பையன் தனது திறமையால் முன்னேறி இருக்கிறார் என்பதைத்தான் அவர் சொல்லி இருக்கிறார். அவர் எதை பேசினாலும் சர்ச்சையாக்க வேண்டும் நினைக்கும் சில கூட்டம் அவரின் வார்த்தையை விஷ ஊசிபோல தேடி எடுத்து சொறுகுவது நியாயமா என அந்த வீடியோவில் பேசி உள்ளார்.