சொந்த நாட்டு மக்களின் மீதே போர் தொடுத்து இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்து, உடமைகளை சூறையாடி மீண்டும் மீண்டும் அந்த இனத்தை அடக்கி நெருக்கடிக்கு உள்ளாக்கி இந்த நூற்றாண்டிலே மிகப்பெரும் மானுட பேரவலத்தை நிகழ்த்தி மீண்டும் ஆட்சி ஏறி அதிகாரம் செலுத்தும் ஓர் அரசாங்கம் எம் நாட்டில் மட்டுமே இருக்க முடியும்.
எமது நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற பல நெருக்கடியான மற்றும் துன்பியல் நிகழ்வுகளுக்குள்ளால் இந்த தமிழினம் இன்னும் வாழ்கிறது என்றால் அதிலும், தனது இருப்பை தங்க வைக்க போராடி வாழ்கிறது என்றால் அது எம்மினத்தால் மட்டுமே முடிந்த ஒன்று.
பல களம் கண்டு இறுதி யுத்தத்தின் போது பதுங்கு குழிக்குள் நீர் நிரம்பிய போதும் கூட எமக்கு ஓர் தீர்வு கிடைத்து விடாதா என எண்ணி போராடிய பலர் இன்றும் எம்மத்தியில் தான் இருக்கின்றார்கள்.
16 வருட போராட்ட வாழ்கை 8 வருட சிறை வாழ்கை என தற்போது வறுமையோடும், வாழ்கையோடும் போராடும் முன்னாள் போராளி ஒருவரின் வலி சுமந்த கதை இது,