மேற்கு வங்க மாநிலத்தில் 4 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 81 வயது முதியவரால் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சிறுமியை வன்கொடுமை செய்த முதியவர் கைது
மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் நேற்று மாலை, கஜோல் பகுதியில் 4 வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த 81 வயதான முதியவர் அச்சிறுமிக்கு சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து, அந்த முதியவர் அச்சிறுமியை யாரும் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார், அழுதுகொண்டே வீட்டிற்கு வந்த அச்சிறுமியிடம் பெற்றோர்கள் விசாரித்தனர்.
அப்போது குழந்தை நடந்ததை கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அச்சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை உறுதி செய்தனர்.
சிறுமியின் உடல்நிலை மோசமானதால் மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினர் கஜோல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பொலிசார் முதியவர் ராய்வை கைது செய்தனர்.
பொலிசார் நடத்திய விசாரணையில், முதியவர் ராய் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.