இந்தியா சினிமாவிலே பிரபலமான இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ.ஆர். ரஹ்மான். இவர் தற்போது பல மொழி படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது ட்விட்டரில் பகிரும் பதிவுகள் சோஷியல் மீடியாவில் பரபரப்பை கிளப்புவது வழக்கம். இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவிற்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விபுல் அம்ருத்லா ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இந்தப்படத்திற்கு பல அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியில் உருவான ‘தி கேரளா ஸ்டோரி’ படம் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் ரிலீஸ் ஆகியுள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இந்தப்படத்தின் டிரைலர் வெளியான போதே கடும் எதிர்ப்புகள் குவிந்தது. ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் தான் மதமாற்றம் செய்யபட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் தள்ளப்பட்டிருப்பதாக பேசியிருந்தார். அத்துடன் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் 32 ஆயிரம் என்ற எண்ணிக்கையை 3 ஆக மாற்றினர். படத்தில் நான்கு பெண்கள் நடித்திருக்கும் போது, மூன்றாக மாற்றியதும் கடும் விமர்சனங்களை உண்டாக்கியது. கேரளாவில் பல கட்சிகளும் இந்தப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கேரளாவை தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.
Viduthalai 2: ‘விடுதலை 2’ படத்தில் இணைந்த விஜய் சேதுபதி மகன்: அதுவும் இப்படி ஒரு ரோலிலா.?
இதனையடுத்து கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் இந்தப்படம் குறித்து பேசும் போது, கேரளா மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை எடுத்துள்ளதாகவும், சங்கபரிவாரின் கொள்கையை பரப்புரை செய்யும் விதமாக இந்தப்படத்தை எடுத்துள்ளதாகவும் கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் நேற்றைய தினம் படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. அதாவது, ‘இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி’ என்ற தலைப்பில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதியில், ஒரு தம்பதியினருக்கு இந்து முறைப்படி திருமணம் நடந்துள்ள காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. மசூதி சார்பாக அந்த தம்பதியினருக்கு பொருளாதார ரீதியாகவும் உதவி செய்துள்ளனர்.
Maaveeran: தலைவருக்காக முடிவை மாற்றிய எஸ்கே: ஹாப்பியான ரசிகாஸ்.!
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘மனித குலத்திற்கான அன்பு நிபந்தனையற்றதாக இருக்க வேண்டும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘தி கேரளா ஸ்டோரி’ பட சர்ச்சைகளுக்கு மத்தியில் ஏ.ஆர். ரஹ்மான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.