Dell Gaming laptops: அதிரடியாக கேமிங் லேப்டாப்களை இறக்கியுள்ள டெல்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Gaming laptops செக்மென்ட்டில் Dell நிறுவனம் புதிதாக அதன் G சீரிஸ் லேப்டாப்களை களம் இறக்கியுள்ளது. இந்த லேப்டாப்களில் Alienware லேப்டாப்களில் இருக்கும் அதே Vapour Chamber Cooling வசதி இடம்பெற்றுள்ளது. இதனால் அதிக நேரம் கேமிங் விளையாடினாலும் நமக்கு வெப்பம் அதிகரிக்காது வகையில் பார்த்துக்கொள்ளும். இந்த இரண்டு லேப்டாப்களிலும் Dolby Atmos வசதி, Intelli Go AI Noise Cancellation, அதிக திறன் வழங்கும் Game Shift வசதியும் உள்ளது.

Dell G15​இதில் intel 13th Gen core i7 HX Processor இடம்பெற்றுள்ளது. மொத்தமாக 14 Core வரையும் NVidia GeForce RTX 4060 GPU இருப்பதால் கேமிங் அனுபவம் சிறப்பானதாக இருக்கும். இதன் டிஸ்பிளே அளவு 15.6 இன்ச் முழு HD+ ஸ்க்ரீன், 120HZ முதல் 165HZ வரை refresh rate வரை பயன்படுத்தலாம்.
Dell G15 Priceஇதன் விலை 89,990 ஆயிரம் ரூபாய் முதல் தொடங்குகிறது. இந்த லேப்டாப் Dark Shadow, Quantum White, Deep Space Blue and Pop Purple With Neo Mint Thermal Shelf ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
Dell G Series Keyboardஇரண்டு லேப்டாப்களிலும் தனியாக லைட்டிங் வசதியுள்ள Keyboard இடம்பெறுகிறது. இதனால் நமக்கு பிடித்தமான கலர்களில் லைட்டிங் வசதியுடன் கேமிங் விளையாடலாம்.
Dell G16அதிகப்படியான திறன் உள்ள கேமிங் லேப்டாப் வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த Dell G16 உங்களுக்கு மிகவும் உதவிகரமானதாக இருக்கும். இதில் கூடுதல் திறன் உள்ள Intel 13th Gen Core i9 HX processor, 24 Core, NVidia GeForce RTX 4070 GPU உள்ளது.
Dell G16 featuresஇதில் 16 இன்ச் QHD+ டிஸ்பிளே வசதி, 165HZ மற்றும் 240HZ வரை Refresh rate இதில் உள்ளது. கூடுதலாக இதில் Dell Alienware Command Centre 6.0 இருப்பதால் கீ போர்டு மேலே நமக்கு பிடித்தமான கலர் லைட்டிங் செய்துகொள்ளலாம்.
Dell G16 Priceஇதன் விலை 1,61,990 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் Metallic Shade மற்றும் Quantum White என இரண்டு கலர் ஆப்ஷன்கள் உள்ளன.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.