சென்னை : நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா இருவரும் 18 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து வணங்கான் படத்தின் சூட்டிங்கை மேற்கொண்டனர்
இந்தப் படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் 35 நாட்களை கடந்து நடத்தப்பட்டது. இரண்டாவது கட்ட சூட்டிங்கும் கோவாவில் திட்டமிடப்பட்டது.
ஆனால் சில மனக்கசப்புகள் காரணமாக படத்தின் சூட்டிங் மட்டுமில்லாமல் படமே நிறுத்தப்பட்டது. தற்போது அருண் விஜய்யை வைத்து பாலா இந்தப் படத்தின் சூட்டிங்கை நடத்தி வருகிறார்.
வணங்கான் படம் கைவிடப்பட காரணம் சொன்ன கிரீத்தி ஷெட்டி :நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இநத்ப் படம் அவரது 42வது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு திஷா பட்டானி, மிர்ணாள் தாக்கூர் உள்ளிட்டவர்கள் ஜோடியாக நடித்து வருகின்றனர். வரலாற்று பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். கோவா, சென்னை உள்ளிட்ட இடங்களில் இநத்ப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
முன்னதாக இயக்குநர் பாலா டைரக்ஷனில் வணங்கான் என்ற படத்தில் சூர்யா நடித்து வந்தார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக்கூட்டணி இணைந்தது. இந்தப் படத்தை தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவே தயாரித்தும் வந்தார். படத்தின் சூட்டிங் கன்னியாகுமரி உள்ளிட்ட இடங்களில் 35 நாட்களை கடந்து நடந்தது. இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் திட்டமிடப்பட்ட நிலையில், படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. படமும் கைவிடப்பட்டது.
சூட்டிங்கின்போது சூர்யா மற்றும் பாலா இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்தப் படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் படம் நிறுத்தப்பட்டது குறித்து இயக்குநர் பாலாவே அறிவித்தார். தொடர்ந்து நடிகர் அருண் விஜய்யை வைத்து இந்தப் படத்தின் சூட்டிங்கை துவங்கிய பாலா, தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்கை நடித்தி வருகிறார். இந்தப் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துவந்த கிரீத்தி ஷெட்டியும் படத்திலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து நடிகை கிரீத்தி ஷெட்டி தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். கிரியேட்டிவ் வேறுபாடுகள் காரணமாகவே பாலா -சூர்யா கூட்டணி நிறுத்தப்பட்டதாகவும், சூர்யா மற்றும் பாலா இடையிலான புரிதல், அன்பு உள்ளிட்டவற்றை தான் நேரில் பார்த்ததாகவும் அதனால் அவர்கள் இந்தப் படத்திலிருந்து விலகியதற்கு வேறு காரணங்கள் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டேட்ஸ் பிரச்சினைகள் காரணமாகவே தானும் இந்தப் படத்திலிருந்து விலகியதாகவும் கிரீத்தி ஷெட்டி தெரிவித்துள்ளார். தற்போது வெங்கட் பிரபு -நாக சைத்தன்யா கூட்டணியில் கஸ்டடி படத்தில் நடித்துள்ளார் கிரீத்தி ஷெட்டி. இந்தப் படம் வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக செய்தியாளர்களிடம் பேசிய கிரீத்தி ஷெட்டி, பல்வேறு தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்.