இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
இந்தியாவில் கோடை காலத்தை முன்னிட்டு Flipkart நிறுவனம் பிரீமியம் ஸ்மார்ட்போன்களை பல்வேறு சலுகைகளுடன் 30 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் விற்பனை செய்கின்றது. அந்த வகையில் எந்தெந்த ஸ்மார்ட்போன்களை நாம் இந்த விலைக்கு வாங்கலாம் என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
Poco X5 Proசமீபத்தில் வெளியான இந்த ஸ்மார்ட்போன் இப்போது பிளிப்கார்ட்டில் 20,999 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இதில் Qualcomm Snapdragon 778G உள்ளது. மேலு 64MP முக்கிய கேமரா, Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட MIUI 14 உள்ளது.
Google Pixel 6aகூகுள் நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக இருக்கும் இது இப்போது 25,999 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த செக்மென்ட்டிலேயே சிறந்த கேமரா வசதியுள்ள ஸ்மார்ட்போனாக இது இருக்கிறது. ஆனால் இதன் டிஸ்பிளே refresh rate அளவு வெறும் 60HZ மட்டுமே இருப்பது ஒரு பின்னடைவு. இந்த ஸ்மார்ட்போனில் Google நிறுவனத்தின் G2 Tensor Chip இடம்பெற்றுள்ளது. இது சிறந்த திறன் உள்ள ஒரு சிப் ஆகும்.
Realme GT Neo 3Tஇந்த விலைக்கு கிடைக்கும் சிறந்த போன் இந்த Realme GT Neo 3T ஆகும். இதன் 6GB + 128GB ஸ்டோரேஜ் பேஸ் வேரியண்ட் விலை இப்போது 19,999 ஆயிரத்தில் இருப்பதால் மிகசிறந்த தேர்வாக இது இருக்கும். இதில் 120HZ Refresh rate உள்ள AMOLED ஸ்க்ரீன், Qualcomm Snapdragon 870 சிப் வசதி, தரமான கேமரா வசதிகளும் உள்ளன. இதில் Android 13 சார்ந்து உருவாக்கப்பட்ட realme UI, 2 ஆண்டுகள் OS அப்டேட் போன்றவை கிடைக்கும்.