சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் விடுதலை.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரில் அனைவரையும் கவர்ந்திருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் சில மாதங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விடுதலை 2 படத்தில் இணைந்த சூர்யா சேதுபதி : நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரிலீசான படம் விடுதலை. இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்தப் படம் சிறப்பாக பூர்த்தி செய்தது. படம் விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது.
இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் இன்னும் சில மாதங்களில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களின் சூட்டிங்கையும் வெற்றிமாறன் ஒரே நேரத்தில் முடித்த நிலையில், சில பேட்ச் வேலைகள் மட்டும் மீதமுள்ளதாகவும் அதையும் முடித்துவிட்டு படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை அவர் துவங்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
படத்தின் முதல் பாகத்தில் கான்ஸ்டபிள் குமரேசனாக சூரியும், பெருமாள் வாத்தியாராகக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர். இதில் விஜய் சேதுபதிக்கு முதல் பாகத்தில் குறைவான காட்சிகளே காணப்பட்டன. இதையடுத்து இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதிக்கு அதிகமான காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் நடித்துள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை 2 படத்தில் சூர்யாவிற்கு வெயிட்டான கேரக்டடர் அமைந்துள்ளதாக தறபோது தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலை 2 செட்களில் தன்னுடைய தந்தையுடன் சூர்யா, இயக்குநர் வெற்றிமாறனுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. முன்னதாக தன்னுடைய தந்தையுடன் விஜய் சேதுபதியின் மகன் மற்றும் மகள் இருவரும் படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது சூர்யா மீண்டும் தன்னுடைய தந்தையுடன் புதிய படத்தில் நடித்துள்ளார்.
தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிவரும் சூர்யா, தன்னுடைய தந்தையை போலவே வெப் தொடர்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். நானும் ரவுடிதான், சிந்துபாத் போன்ற படங்களில் தன்னுடைய தந்தை விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் சூர்யா சேதுபதி. தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு வெயிட்டான ரோல் என்று கூறப்படும் நிலையில், படத்தில் அவருக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்