TWS under 3000: தரமான ஏர்போன் 3000 ரூபாயில் அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் சலுகைகளுடன் வாங்கலாம்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
உங்களிடம் உள்ள ஸ்மார்ட்போன்களில் ஹெட்போன் ஜாக் இடம்பெறவில்லை என்றால் உங்களுக்கு தேவை வயர்லெஸ் ஏர்போன். தற்போது கோடை காலம் என்பதால் இந்தியாவில் முன்னனி ஆன்லைன் ஷாப்பிங் தளங்களாக இருக்கக்கூடிய Amazon மற்றும் Flipkart பல்வேறு சலுகைகளுடன் TWS earphones விற்பனை செய்கின்றனர்.

அதில் பட்ஜெட் செக்மென்ட்டாக இருக்கும் 3000 ஆயிரம் ரூபாய் செக்மென்ட்டில் ANC, Transparency mode, ப்ளூடூத் Codec போன்ற வசதிகளுடன் கிடைக்கின்றன. இதில் சிறந்த தேர்வாக இருக்கும் சில TWS Earphones பற்றி முழு பட்டியலை இந்த பதிவில் காணலாம்.
​Oppo Enco Air 3சிறந்த ஆடியோ கருவிகளை விற்பனை செய்யும் Oppo நிறுவனம் இந்த புதிய TWS கருவியை சமீபத்தில் வெளியிட்டது. இந்த கருவியில் ANC, Spatial Audio இருப்பதால் சிறந்த சவுண்ட் பேலன்ஸ் கிடைக்கிறது. இதை Android மற்றும் iphones என இரண்டு வகை ஸ்மார்ட்போன்களிலும் வேலை செய்யும்.
இதன் டிசைன் பார்ப்பதற்கு ஆப்பிள் ஏர் போட் போன்ற டிசைன் உள்ளது. இதை நாம் பயன்படுத்த Hey Melody App ஒன்று உள்ளது. இதன் கட்டமைப்பும் தரமாகவே உள்ளது. மொத்தத்தில் பிரீமியம் அனுபவம் தரக்கூடிய அனைத்து அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை 2,999 ஆயிரம் ரூபாய்.
​Realme Buds Air 3 Neoமிகவும் குறைந்த விலையில் தரமான பிரீமியம் அனுபவம் தரும் ஏர்போன் வேண்டும் என்று நினைத்தால் Realme Buds Air 3 Neo சிறந்த தேர்வாக இருக்கும். இதன் டிசைன் மற்றும் கட்டமைப்பு எடை குறைவாகவும் காம்பாக்ட்டாக உள்ளது. இதன் விலை 1,899 ஆயிரம் ரூபாய் ஆகும்.
Oneplus Nord Budsஸ்மார்ட்போன்களில் காலிங் பேசுவதற்கு சிறந்த TWS கருவி என்றால் அது Oneplus Nord Buds ஆகும். இதில் Automatic Wear Detection, ANC, சிறந்த Bass இருப்பதால் அதிகப்படியான பேஸ் ஆடியோ எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த கருவியை தேர்வு செய்யலாம். இதன் பேட்டரி 24மணிநேரம் நீடிக்கும் என்று Oneplus நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை 2,799 ஆயிரம் ரூபாய் ஆகும்.
​JBL Wave 200இந்த கருவி 2,298 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கிறது. இதில் Deep Bass வசதி, 20 மணிநேர பேட்டரி, டூயல் கனெக்ட் டெக்னாலஜி, டச் மற்றும் வாய்ஸ் அஸ்சிஸ்ட் போன்ற வசதிகள் உள்ளன.
SkullCandy Dimeஇந்த TWS விலை 2,099 ஆயிரம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. இந்த TWS 12 மணிநேரம் நீடிக்கும். ஆனாலும் அனைத்து விதமான பயன்பாட்டிற்கு ஏற்ற ஒரு TWS கருவியாக இது இருக்கும்.
​செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸ்ல் ‘சமயம் தமிழ்’ இணையதளத்தை பின் தொடருங்கள்​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.