புதுடில்லி: ஆல் இண்டியா ரேடியோ இனி மேல் ஆகாஷவாணியாக கூறப்படும் என தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகம் துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆல் இண்டியா ரேடியோ 23 மொழிகள் மற்றும் 146 பேச்சு வழக்குகளில் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. நாட்டின் 92 சதவீதம் அளவில் அனைத்து பகுதி மக்களையும் சென்றடைகிறது. 1939 ம் ஆண்டு முதன் முறையாக நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூரால் ஆகாஷ்வாணி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
இந்தியாவில் ரேடியோ கடந்த 1923 ம் ஆண்டு பாம்பே ரேடியோ கிளப் சார்பில் முதல் வணிக ஒலிபரப்புடன் துவங்கப்பட்டது. 1927-ல் இந்திய ஒலிபரப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டத. 1930-ல் இந்திய மாநில ஒலிபரப்பு சேவை அமைக்கப்பட்டது. இவை மாற்றம் செய்யப்பட்டு 1936 ம் ஆண்டு முதல் ஆல் இண்டியா ரோடியோ என பெயரிடப்பட்டது. தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் ரேடியோ மற்றும் டி.விக்கான பிரசார் பாரதி சட்டம் உருவாக்கப்பட்டது.
கடந்த 1990ம் ஆண்டு இயற்றப்பட்ட பிரசார் பாரதி சட்டத்தின் படி ஆல் இண்டியா ரேடியோ இனி ஆகாஷவாணி என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தின் கொள்கை பிரிவு சார்பில் நாடு முழுவதும் உள்ள அனைத்து மையங்களுக்கும் தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் இது ஆல் இண்டியா ரேடியோ” என்ற தற்போதைய அறிவிப்புக்குப் பதிலாக “இது ஆகாஷ்வானி” என்ற அறிவிப்புடன் தொடங்கும் எனவும், புதிய அறிவிப்பு வடிவம் மற்ற மொழிகள் அல்லது பேச்சுவழக்குகளிலும் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஆங்கில செய்திகள் மற்றும் இதன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஆகாஷவாணி என்றே இந்தியில் இனி அழைக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
![]() |
இதனிடையே பிரசார் பாரதியின் இந்த திடீர் முடிவு நியாயமற்றது. பல தசாப்தங்களாக ஆங்கில ஒலிபரப்புகளும் பிராந்திய ஒலிபரப்பு நிலையங்களும் இணைந்து ‘வானொலி’ என்ற பெயரைப் பயன்படுத்தி வருகின்றன. அகில இந்திய வானொலியில் தமிழுக்கு உரிய இடத்தை மறுத்து, அதற்கு பதிலாக ஹிந்தி திணிக்கும் பிரசார் பாரதியின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement