எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது.
நாடு முழுவதும் 499 நகரங்களில் நடைபெறும் இத்தேர்வை, 20 லட்சத்துக்கும் அதிமான மாணவ – மாணவியர் எழுதவுள்ளனர்.
தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில், இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்ச மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் தேர்வு மையங்க ளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வை ஒத்திவைத்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.