உடனடி வேலை… அமெரிக்காவுக்கு விசா… 5 பேருக்கு குழந்தை…! குட்டி பத்மினி சொல்வதெல்லாம் உண்மையா..?

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பொழுது விடிந்தான் மேடு காலனியில் புதுப்பிக்கப்பட்டுள்ள விஜயராகவ வைகுண்ட பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை கொண்டு சென்ற நடிகை குட்டிபத்மினி ,அந்த கோவிலில் வேண்டிக் கொண்டால் நினைப்பதெல்லாம் நடப்பதாக கூறி உள்ளார்.

தலையில் தட்டை வைத்துக் கொண்டு கோவிந்தா… கோவிந்தா… என்று மெய் மறந்து ஆடுவது போல ஆடினாலும்.. சில நிமிடங்களில் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடம் போதுமாப்பா என்று கண்காளாலேயே பேசும் இவர் தான் நடிகை குட்டி பத்மினி..!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளக்குளம் அருகே பொழுது விடிந்தான் மேடு என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் காலனி பகுதியில் சுமார் 1200 வருடம் பழமை வாய்ந்த விஜயராகவ வைகுண்ட பெருமாள் கோயில் சிதிலமடைந்து இருந்ததாகவும், வெங்கடேசன் என்பவர் கனவில் தோன்றி சாமி உத்தரவிட்டதால், கோவிலை 3 வருடத்திற்கு முன்பு புதுப்பித்து கும்பாபிசேகம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்த கோவிலின் பிரம்மோற்சவத்தையொட்டி நடந்த திருக்கல்யாண நிகழ்வுக்கு நடிகை குட்டி பத்மினி அந்த பகுதி பெண்களுடன் இணைந்து சீர்வரிசை பொருட்களை சுமந்து சென்றார்.

திருக்கல்யாண உற்சவம் முடிந்து பிரசாதம் பெற்றுக் கொண்ட குட்டிப்பத்மினி, அந்த கோவிலை பிரபலப்படுத்தும் முயற்சியாக இங்கு வேண்டிக் கொண்டால் நினைப்பதெல்லாம் நடப்பதாக சில விவரங்களை அள்ளிவிட்டார்.

அப்போது ஒருவர் அவரிடம் உங்களுக்கு இந்த பகுதி தானா? என்று கேள்வி யெழுப்பியதும், தனக்கு மேலக்கோட்டையூர், தான் ஐய்யங்கார் என்று கூறியதோடு தனக்கு சாதி பாகுபாட்டில் நம்பிக்கையில்லை என்றும் தெரிவித்தார்.

இந்த கோவிலில் ராஜ கோபுரம் கட்டும் பணிக்கு நிதி திரட்டுவதற்காக , குட்டி பத்மினியை வரவைத்து கோவிலின் அருமை பெருமைகளை எல்லாம் ஊராருக்கு புரியும்படி பேச வைத்ததாக கூறப்படுகின்றது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.