கடைசி பந்தில் கேட்ச், ஆனால் அவுட் இல்லை! நடுவரின் ட்விஸ்ட்..ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத்


ஜெய்ப்பூரில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது.

பட்லரின் ருத்ரதாண்டவம்

நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் துடுப்பாடியது. ருத்ர தாண்டவம் ஆடிய ஜோஸ் பட்லர் 59 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார்.

கேப்டன் சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 35 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 214 ஓட்டங்கள் குவித்தது. புவனேஷ்வர் குமார் மற்றும் யென்சன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதன் பின்னர் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர்கள் அன்மோல்ப்ரீத் சிங் 33 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 55 ஓட்டங்களும் விளாசினர்.

சஞ்சு சாம்சன்/Sanju Samson Rajasthan Royals (Twitter)

பிலிப்ஸ் சரவெடி

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய ராகுல் திரிபாதி 29 பந்துகளில் 3 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 47 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார்.

அதன் பின்னர் வந்த கிளாசென் 12 பந்துகளில் 26 ஓட்டங்களும், பிலிப்ஸ் 7 பந்துகளில் 25 ஓட்டங்களும் விளாசினார்.

அபிஷேக் சர்மா/Abishek Sharma @IPL (Twitter)

கடைசி ஓவரில் ஐதராபாத் அணியின் வெற்றிக்கு 17 ஓட்டங்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய அந்த ஓவரை எதிர்கொண்ட அப்துல் சமாத் முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்தார்.

கடைசி பந்தில் ட்விஸ்ட்

இரண்டாவது பந்தை அவர் சிக்ஸருக்கு விளாச ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. அடுத்தடுத்த பந்துகளில் ஐதராபாத் அணிக்கு 2,1,1 என ஓட்டங்கள் வந்தது.

கடைசி பந்தில் 5 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் சமாத் அடித்த பந்து கேட்ச் ஆனது.

ஆனால் அது நோ பால் எனக் கூறி களநடுவர் ட்விஸ்ட் கொடுத்தார்.

பின்னர் மீண்டும் கடைசி பந்தை சந்தீப் வீசியபோது சமாத் அதனை சிக்ஸராக மாற்ற, ஐதராபாத் அணி மிரட்டலாக வெற்றி பெற்றது.

கடைசி பந்தில் கேட்ச், ஆனால் அவுட் இல்லை! நடுவரின் ட்விஸ்ட்..ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்திய சன்ரைசர்ஸ் ஐதராபாத் | Srh Last Ball Six Beat Rr By 4 Wickets @SunRisers (Twitter)

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தரப்பில் சஹால் 4 விக்கெட்டுகளும், குல்திப் யாதவ் மற்றும் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.    

சஹால்/Chahal @IPL (Twitter)



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.