பணத்தை எடுப்பதற்காக மக்கள் கழிவுநீரில் போட்டிப்போட்டுக்கொண்டு கூட்டமாக குதித்ததால் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.
பீகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டம் மொராதாபாத் கிராமத்தில் உள்ள கழிவுநீர் வாய்க்கால் ஒன்றில் 2000, 500 ரூபாய் நோட்டுகள் கிடந்ததால் கிராம மக்கள் உற்சாகம் அடைந்தனர்.
வாய்க்காலில் ரூபாய் நோட்டுகள் அடங்கிய பைகள் இருப்பது குறித்த தகவல் காட்டுத்தீ போல பரவியது. எனவே, மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த இடத்திற்கு வந்து பணத்தை அள்ள தொடங்கினர்.
கழிவுநீரில் குதித்த ஏராளமான மக்கள் ரூ.2,000, ரூ.500, ரூ.100, ரூ.10 உள்ளிட்ட ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரூபாய் நோட்டுகள் உண்மையான ரூபாய் நோட்டுகளா என்றும், அவற்றை வாய்க்காலில் வீசியவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in