காரைக்கால் : மாடியில் இருந்து தவறி விழுந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு.!!
காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியில் வட மாநிலத்தைச் சேர்ந்த சுகுணா குப்தா என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தை இன்று மாலை வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தவறி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அந்த சிறுமி வீட்டின் சுற்றுச்சுவர் கேட்டின் மீது விழுந்ததில் அவருடைய முதுகில் கேட்டின் கம்பிகள் குத்தியுள்ளது. இதனால், அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் கதறியுள்ளார். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுமியின் பெற்றோர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனை சார்பில் இது போலீஸாருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் படி விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பின்னர் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமி மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.