லாகூர்-தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட, ‘காலிஸ்தான் கமாண்டோ படை’ என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவரான பரம்ஜித் சிங் பஞ்ச்வார், மர்ம நபர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.
பஞ்சாபில் பிறந்த பஞ்ச்வார், ௧௯௯௦களில், நம் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்று, காலிஸ்தான் கமாண்டோ படையின் பொறுப்பை ஏற்றார்.
இவர், லாகூரில் தன் குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.
இவருக்கு பாகிஸ்தான் அரசு எதிர்ப்பு தெரிவித்ததால், தன் மனைவி மற்றும் குழந்தைகளை, ஐரோப்பிய நாடான ஜெர்மனிக்கு அனுப்பி விட்டு, இவர் மட்டும் லாகூரில் வசித்து வந்தார்.
இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இவர் மீது, பல பயங்கரவாத வழக்குகள் உள்ளன. ஆயுதம் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தல் வாயிலாக தன் அமைப்புக்கு நிதி திரட்டி வந்தார்.
இந்நிலையில், லாகூரின் ஜோஹர் நகரில் நேற்று காலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த இவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில், பஞ்ச்வாரின் பாதுகாவலர்கள் காயமடைந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement