சீன மர்மம்: வீடியோக்கள் அழிப்பு.. கட்டுப்பாடுகள் அதிகரிப்பு.. என்ன நடக்கிறது.?

சீனாவில் பல்வேறு விஷங்கள் மர்மமாகவே நடக்கின்றன. வுகான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது முதல் நாட்டின் முக்கிய தொழிலதிபர்கள் திடிரென காணாமல் போகிற நிகழ்வுகள் வரையிலும் பல்வேறு நிகழ்வுகள் ரகசியம் காக்கப்பட்டு வருகின்றன. சீனா ஒரு கம்யூனிச நாடு என்பதால் அதன் பாதுகாப்பு கருதி, நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

உற்பத்தி துறையில் ஜெயிக்கணும்னா, மாணவர்கள் இதை கண்டிப்பா கத்துக்கணும்!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அமெரிக்காவிற்கு நிகரான பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் ராணுவ வளர்ச்சியால் சீனா மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துள்ளது இருப்பினும் வடகொரியா உள்ளிட்ட கம்யூனிச நாடுகளை போல பல்வேறு சென்சார்சிப்கள் இங்கு கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதுவரை சீனாவின் பிரம்மாண்டத்தை மட்டுமே வெளி உலகத்திற்கு காட்டி வந்தநிலையில், நாட்டின் ஏழைகள் பற்றி சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சமீபத்திய வீடியோ ஒன்றில், ஓய்வு பெற்ற பெண் ஒருவர் தனது வருமானத்தின் ஒரே மூலமான மாதாந்திர பென்சன் தொகையை முழுவதுமாக செலவு செய்து காய்கறிகள் வாங்கியது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. சீனாவின் பணவீக்கம், ஏழைகளின் துயர் உள்ளிட்டவை வீடியோவில் பேசப்படுவதால் சமூகவலைதளங்களில் வைரலானது. அதையறிந்த அதிகாரிகள் உடனடியாக அந்த வீடியோவை நீக்கியுள்ளனர்.

இப்படியாக பல வீடியோக்கள் சமூக வலைதளிங்களில் ட்ரெண்டாவதும், பின்னர் நீக்கப்படுவதும் சீனாவில் வாடிக்கையாகி வருகிறது. அரசின் நற்பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் தகவல்கள், சோகத்தை பற்றிய பதிவுகள், கம்யூனிசத்தை கேள்வி கேட்கும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் இருந்து அகற்றப்படும் என கடந்த மார்ச் மாதம் சீன சைபர்துறை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், இப்படி வீடியோக்கள் அழிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஏழ்மைக்கு எதிரான போரில் வென்றுகாட்டுவோம் என கடந்த 2021ம் ஆண்டு சீன அதிபர் ப்ல திட்டங்களை பிரகடனப்படுத்தினார். இருப்பிலும் சீனாவில் வறுமை தீர்ந்தபாடில்லை என்பது மேற்கூறிய வீடியோக்கள் மூலம் தெரியவந்துள்ளது.

வேகமாக வளர்ந்த நாட்டின் பொருளாதாரம் தற்போது மந்தமாகிவருகிறது. குடிமக்கள் தங்கள் எதிர்காலத்தை நினைத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகின்றனர். அதனால் சீனர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் கூறிவருகின்றன. அதற்கேற்றார் போல் சீனாவில் பிறப்பு விகிதம் என்பது, வரலாற்றில் இல்லாதது போல் முதல்முறையாக மிகவும் குறைவான பிறப்பு விகிதம் பதிவாகியுள்ளது.

பிரிட்டன் மன்னராக பதவியேற்கும் சார்லஸ்.. வரிசைக்கட்டி கிளம்பும் இந்தியர்கள்.. அட இந்த நடிகையுமா?

எதிர்காலத்தை கடமைகள், குழந்தை பராமரிப்பு, கல்வி செலவு, குடும்ப பொருளாதாரம் உள்ளிட்ட காரணிகளால் சீனர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கினாலும், வறுமையை ஒழிக்க முடியாமல் திணறிவருகிறது சீனா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.