புதுடெல்லி: உள்நாட்டு கலவரம் நடைபெறும் சூடானின் துறைமுக நகரான போர்ட் சூடானிலிருந்து சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை விமானப் படையைச் சேர்ந்த சி-17 விமானம் 192 பேரை சூடானிலிருந்து மீட்டு ஜெட்டா செல்லாமல் நேரடியாக இந்தியா அழைத்து வந்துள்ளது.இந்த விமானத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளில் குடி யுரிமைப் பெற்ற இந்தியர்கள்.
இதனால், இவர்களை ஜெட்டா வுக்கு அழைத்து வந்து பிறகு அங்கிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரமுடியாத சட்ட சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக, இந்த விமானம் ஜெட்டாவுக்கு செல்லாமல் நேராக இந்தியாவுக்கு வந்துள்ளது.
பயணத்தின்போது ஒரு பயணி சுயநினைவை இழந்துவிட்டார். விமானப் பணியாளர்கள் அவருக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தி உதவினர். இந்த விமானம் வெற்றிகரமாக வியா ழக்கிழமை இரவு அகமதா பாத் வந்தடைந்தது