மன்னர் சார்லஸிற்கு மீண்டும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு விருப்பம் உள்ளதா என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று (06.05.2023) முடிசூடினார்.
சாதகமான பதில்
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக லண்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சார்லஸ் மன்னரை சந்தித்த போதே இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதன்போது மீண்டுமொருமுறை இலங்கை வருகின்றீர்களா நான் உங்களிற்கு அழைப்பு விடுக்கலாமா என ஜனாதிபதி மன்னர் சார்லஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு மன்னர் சார்லஸ் சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.