ஜெர்மனியில் பழமையான பாலம் ஒன்று மிகுந்த பாதுகாப்புடன் வெடிவைத்து தகர்க்கப்பட்டது.
டார்ட்மண்ட் – அஸன்பார்க் இடையிலான A45 நெடுஞ்சாலையில் லீடன்ஷிட் பகுதியில் 1968 – ம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. 453 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் சிதிலமடைந்த நிலையில் புதிய பாலம் கட்டுவதற்காக 150 கிலோ வெடிபொருட்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பாலம் தகர்க்கப்பட்டதை பொதுமக்கள் பலர் பார்வையிட்டதுடன் தங்களின் செல்போனில் பதிவு செய்தனர்.