தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் கே.ஜி.எப் கதை
நடிகர் தனுஷ், இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணி என்றாலே வெற்றிபடம் தான். பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என்று தொடர் வெற்றிகளை இவர்கள் கூட்டணி கொடுத்து வருகின்றனர். அடுத்து இவர்கள் கூட்டணியில் வட சென்னை 2 உருவாக உள்ளது. இதற்கிடையே இவர்களின் கூட்டணி குறித்து புதிய தகவல் ஒன்றை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு பேட்டியில் கூறி உள்ளார். அதில் தனுஷ் வெற்றிமாறன் படத்தை பற்றி கூறியுள்ளார். அதன்படி, தற்போது கே.ஜி.எப் கதை களத்தை பற்றி பல படங்கள் தயாராகி வருகிறது. விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள படம் கே.ஜி.எப் கதை களத்தை மையமாக கொண்டுள்ள படமாக இருக்கும். வெற்றிமாறன் அதற்கான விவரங்களை சேகரித்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.