பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

லண்டன்: இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று நடந்த விழாவில் அந்நாட்டு மன்னர் 3-ம் சார்லஸ் (74) முறைப்படி முடிசூடிக் கொண்டார்.

கடந்த 1952-ம் ஆண்டு 2-ம் எலிசபெத் தனது 26-வது வயதில் இங்கிலாந்து ராணியானார். அவருக்கு கடந்த 1953-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி முடிசூட்டு விழா நடைபெற்றது. இந்நிலையில், அவர் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி காலமானார்.

இதையடுத்து அவரது மகனும் இளவரசருமான 3-ம் சார்லஸ் மன்னரானார். அவருக்கு 2023-ம் ஆண்டு மே 6-ம் தேதி பாரம்பரிய முறைப்படி முடிசூட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் நேற்று முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலிருந்து பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் மன்னரான மூன்றாம் சார்லஸ் அவசியம் கடைபிடிக்க வேண்டிய அரசக் குடும்ப விதிமுறைகள் விவரம்…

பரிசுகளை மறுக்கக் கூடாது: பிரிட்டன் அரச குடும்ப வழக்கத்தின்படி மன்னர் பரிசு பொருட்களை மறுக்கக் கூடாது.

மகனுடன் பயணம் கூடாது: மன்னரான மூன்றாம் சார்லஸ் இளவரசர் உடன் ஒன்றாக ஒரே விமானத்தில் பயணிக்கக் கூடாது. மன்னர் தனி விமானத்தில்தான் பயணிக்க வேண்டும்.

ஆடை விதிமுறைகள்: அரசர் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது சில ஆடை விதிகளையும் பின்பற்ற வேண்டும். விதிகளின்படி,அவர்கள் பயணம் செய்யும் நாட்டின் உள்ளூர் பாரம்பரியத்தை அவர்களின் ஆடை பிரதிபலிக்க வேண்டும்.

செல்ஃபி கூடாது: மன்னர் மக்களுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கக் கூடாது. ஆட்டோகிராஃப் (கையெப்பம்) வழங்கக் கூடாது.

மட்டி மீன்கள் உண்ணக் கூடாது: உணவு நச்சுத் தன்மையைத் தவிர்ப்பதற்காக மட்டி மீன்களை அரசர் உட்கொள்ளக் கூடாது. மன்னர் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்நியர்களிடமிருந்து உணவையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.