மதுரை கர்நாடகா மாநிலத்தில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மத்தியிலும் ஆட்சி மாறும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறி உள்ளார். கர்நாடகா மாநில சட்டப்பேரவை தேர்தல் வரும் 10 ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம் பி அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்றார். அவர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் வாழும் பகுதியில் பிரச்சாரம் செய்து விட்டு மதுரை திரும்பி உள்ளார். […]