தமிழக முழுவதும் கடந்த சில நாட்களாக இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகி புயலாக வலுப்பெறப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்தப் புயலால் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியை மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளின் தெற்கு பகுதியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும், வரும் மே 9ம் தேதி 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும், மே 10ம் தேதி வாக்கில் 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீச கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் மத்திய வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை அடுத்து தமிழ்நாடு மீன்வளத்துறை திருவள்ளூர் மாவட்டம் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என்பதால் தடையை விதித்துள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.