திராவிடம் குறித்து ஆளுநர் பேசியதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினை ஆற்றியுள்ளார்.
ஸ்டாலின் ஆட்சி எப்படி இருக்கிறது? – மக்கள் கருத்து!
தமிழகத்தில்
ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவடந்து இன்றுடன் மூன்றாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. வேங்கைவயல் சம்பவம், பரந்தூர் விமான நிலையம், 12 மணி நேர வேலை உள்ளிட்ட திமுக அரசின் பல நடிவடிக்கைகள் மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி இருந்தாலும், மகளிர் இலவச பயணம், காலை சிற்றுண்டி திட்டம், குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை உள்ளிட்ட சில காரணிகள் அரசுக்கு கை கொடுத்துள்ளன.
இந்தநிலையில் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு ஆளுநர் ரவி, திராவிட மாடல் கொள்கை குறித்து கருத்து தெரிவித்து இருப்பது கடந்த இரண்டு நாட்களாக பேசு பொருளாக உள்ளது. திராவிட மாடல் கொள்கை காலாவதியாகி விட்டது எனவும், ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானவை தான் திராவிட கொள்கைகள் என ஆளுநர் பேச, தமிழகம் கொந்தளித்தது.
இந்த சூழலில் சென்னை பல்லாவரத்தில் திமுக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதல்வர்
பேசும்போது, ‘‘ஆறாவது முறையாய் ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ள திமுக அரசின் கடந்த இரண்டு ஆண்டுகளும், ஒவ்வொரு நாளும் நாட்டுக்கு நன்மை செய்யும் நாளாகவே அமைந்துள்ளது. தினந்தோறும் திட்டங்கள் தீட்டி செயல்பட்டு வருகிறோம். ஊர்தோறும் வளர்ச்சியைக் கொண்டு வருகிறோம்.
10 ஆண்டு காலம் பாழ்பட்டு கிடந்த தமிழ்நாட்டை மீட்டது விடியல் ஆட்சி. அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ள திராவிட மாடல் மக்களாட்சியின் மகத்தான பயணம் பல பத்து ஆண்டுகளுக்கும் தொய்வின்றித் தொடரும். அனைவரையும் அரவணைப்பது தான் திராவிடம், அதற்கு பிரிக்க தெரியாது. ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம்.
ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஒரே ஆயுதம் திராவிடம் தான். அதனால்தான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார். எந்த காரணத்திற்காக ஆளுநர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்? தமிழ்நாட்டில் அமைதி நிலவக் கூடாது என்பதற்காக ஆளுநர் அனுப்பி வைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுள்ளது. ஆளுநரும் எதிர்க்கட்சி தலைவர் போலவே பேசிவருகிறார்.
ஆளுநர் உடனான தனிப்பட்ட நட்பு என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தடா, மிசா, பொடா உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்தவர்கள். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன். கொள்கையில் எப்போதும் உறுதியாக இருப்பேன்’’ என்று பேசினார்.