லண்டனில் உள்ள மெக்டொனால்டு உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் சீஸ் பர்கர் ஆர்டர் செய்திருக்கிறார். சீஸ் பர்கரை பாதி சாப்பிட்ட நிலையில், அதில் எலியின் எச்சம் இருந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், இந்த சம்பவம் குறித்து 2021-ல் புகார் அளித்து இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் சுகாதார அதிகாரிகள், அந்த உணவகத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். உணவகத்தின் பல பகுதிகளிலும், சமையல் அறைகளிலும் எலியின் எச்சம் இருப்பதை அதிகாரிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு சமையலறை சுகாதாரமற்று, தூசியும் அழுக்கும் படிந்து இருந்துள்ளது. இது வாடிக்கையாளரின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதினர். ஆய்வுக்குப் பிறகு, உணவகம் 10 நாள்களுக்கு மூடப்பட்டது. அதன் சுகாதார நிலைமைகளை கவுன்சில் அனுமதித்த பின்னரே மீண்டும் திறக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு 5 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க மெக்டொனால்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் தொடர்பாக மெக்டொனல்டு உணவகம் மன்னிப்பு கோரியுள்ளது.
வால்தம் வன கவுன்சில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆய்வின் போது இருந்த உணவகத்தின் சுகாதாரமற்ற நிலையை படமெடுத்து பகிர்ந்துள்ளது.