ரஷ்யாவின் முக்கிய இலக்கு இதுதான்..மரணம் மற்றும் குழப்பத்தை கொண்டுவருவது..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி


ரஷ்யாவின் இலக்கு பாதுகாப்பு தான் எனவும், உக்ரைனுடன் இருந்த அனைவருக்கும் நன்றி எனவும் உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்ரைன் வீரர்கள் மீட்பு

உக்ரைன்-ரஷ்யா போர் ஓர் ஆண்டை கடந்து நீடித்து வரும் நிலையில், ரஷ்யா படைகள் உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றியுள்ளன.

எனினும், தலைநகர் கீவ்வை மட்டும் ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை.

உக்ரைன் வீரர்கள் பலர் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்டனர்.

அவர்களில் 45 பேரை தங்கள் குழு மீட்டெடுத்துள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியிருந்தார். அத்துடன் போரில் ஈடுபட்டுள்ள அனைவரும் வெற்றி பெற வேண்டும் என கூறியிருந்தார்.

ரஷ்யாவின் முக்கிய இலக்கு இதுதான்..மரணம் மற்றும் குழப்பத்தை கொண்டுவருவது..உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி | Zelenskyy Said Russia Main Target Security Image: AP Photo/Efrem Lukatsky, File

ரஷ்யாவின் இலக்கு குறித்து பேசிய ஜெலென்ஸ்கி

இந்த நிலையில் ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள பதிவில், ‘ரஷ்யாவின் முக்கிய இலக்கு பாதுகாப்பு தான். நம் நாட்டிலும் சுதந்திர உலகிலும். அதை அழிப்பது, மரணம் மற்றும் குழப்பத்தை கொண்டுவருவது எல்லாம் பயங்கரவாத அரசு செய்கிறது.

உக்ரைன் பாதுகாப்பை மீட்டெடுக்க உதவுபவர்கள், பயங்கரவாத அரசுக்கு அழுத்தம் கொடுப்பவர்கள் – அனைவரும் அமைதியின் பாதுகாவலர்கள். உக்ரைனுடன் இருந்த அனைவருக்கும் நன்றி!’ என தெரிவித்துள்ளார்.    

ஜெலென்ஸ்கி/Zelenskyy File Photo



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.