ரோபோ சங்கர் இப்படியானதற்கு காரணம் இதுதான்.. பயில்வான் சொன்ன ஷாக் நியூஸ்!

சென்னை : நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் இப்படியானதற்கு காரணம் அவரது மதுபழக்கம் தான் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

காமெடி, மிமிக்ரி என புகுந்து விளையாடிய நடிகர் ரோபோ சங்கர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு காணப்பட்டார்.

இவரின் இந்த நிலைமையைப் பார்த்து அவரது ரசிகர்கள் பதறிப்போனார்கள்

நடிகர் ரோபோ சங்கர் : இதையடுத்து அவரது மனைவி பிரியங்கா, அவர் நலமாக தான் இருக்கிறார் என்றும், ஒரு படத்திற்காகத்தான் அவர் உடல் எடை குறைந்துக்கொண்டதாகவும், இதனால், ரசிகர்கள் பயப்படத் தேவையில்லை என்று அவரது கூறியிருந்தார்.ஆனால், அவருக்கு வயிற்று போக்கு ஏற்பட்டதாகவும், அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருந்ததாக தெரியவந்துள்ளது.

பயில்வான் ரங்கநாதன் : இந்நிலையில் மூத்த பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தற்போது திரைத்துறையில் இருக்கும் நடிகர்கள் பலர் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தே இருக்கிறார்கள். அந்த காலத்தில் நடிகர் சிவாஜி,கணேஷன், ஜெமினி கணேஷன் போன்ற நடிகர்கள் உடல் உடையை குறைக்க தகுந்த உடற்பயிற்சி செய்தார்கள்.

Bayilvan Ranganathans shocking news about Robo Shankars health

நடிகர்கள் மது அருந்துவார்கள் : அவர்கள் தங்களது உடல் உடையை குறைப்பதற்காகவோ, அழகுப்படுத்திக் கொள்வதற்கோ எந்தவிதமான ரசாயன பொருட்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை. எஸ்எஸ் ராஜேந்திரன் தினமும் மது அருந்தினாலும், தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடுவார் ஏன் என்றால், அப்போது தான் கல்லீரல் பாதிக்காது என்பார். அதே போலத்தான் ஜெமினி கணேஷனும் மதுவை அளவாக பயன்படுத்துவார்.

அதிர்ச்சி அடைந்தேன் : அண்மையில் அவர் உடல் மெலிந்து இருக்கும் போட்டோவை வெளியானது அதில் ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்பட்டார். அதைப் பார்த்ததும் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ரோபோ சங்கரை மிமிக்ரி நடிகராக இருக்கும்போதே எனக்கு நன்றாக தெரியும், அவர் வொர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக பார்த்துக்கொண்டார். ஆனால், அவர் பிரபலமானதற்கு பிறகு, சேரக்கூடாத நண்பர்களுடன் சேர்ந்து மதுவுக்கு அடிமையானார்.

Bayilvan Ranganathans shocking news about Robo Shankars health

நிற்கக்கூட முடியவில்லை : மது அருந்தாமல் தூங்கமே வராது என்ற நிலைக்கு மாறிவிட்டார். ஓட்டலில் பப்ளிக்காக மது அருந்தியதை பலர் பார்த்து இருக்கின்றனர். அவர் இந்த நிலைக்கு வந்ததற்கு மிக முக்கிய காரணம் மதுப்பழக்கத்தால் அவருக்கு வந்த மஞ்சள் காமாலை தான் முக்கியமான காரணம். இப்போது அவரால் நிற்கக்கூட முடியாத அளவிற்கு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறார் என்று அவரை பார்த்தவர்கள் சொன்னதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.