உணவு தயாரிப்பில் புதுமையை புகுத்துகிறோம் என்ற வகையில் தற்போது விந்து கலந்த உணவு தயாரிப்பு குறித்த தகவல் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
ஸ்பெயின் நாட்டில் மாட்ரிடில் பிரபல சமையல்காரரும், டைவர் எக்ஸஓ என்ற உணவகத்தின் உரிமையாளருமான டேவிட் முனோஸ் தனது உணவகத்தின் மெனுவில் மீன் விந்துவால் செய்யப்பட்ட உணவுகளை சேர்க்கப்போவதாக அறிவித்துள்ளார்.
ஜப்பானில் இது போன்ற உணவு வகைகள் சர்வ சாதாரணம் என்றும், அதை தானே சுவைத்துப் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இந்த விந்து பஃபர் ஃபிஷ், மாங்க் ஃபிஷ் மற்றும் காட் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது.
டேவிட் முனோஸ் சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஜப்பானிய சமையல் கலைஞரான ஹிரோசாடோவுடன் மீன் விந்தணுக்களால் செய்யப்பட்ட உணவை ருசித்து பார்த்த பிறகு அவருக்கு இந்த யோசனை வந்துள்ளது.
இதனையடுத்து டேவிட், தாம் ருசித்த உணவை மாட்ரிட் நகர மக்களுக்கு தர நினைத்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால் அவரது யோசனையை மக்கள் விரும்பவில்லை.
மீன் விந்துவைக் கொண்டு உணவு சமைப்பது, அதை நினைத்தாலே குமட்டுகிறது என்று மாட்ரிட் நகர மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
newstm.in