புதுடில்லி: அடுத்தாண்டு நடைபெற உள்ள குடியரசு தினவிழா அணிவகுப்பில், பெண்கள் படை மட்டும் பங்கேற்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாடு, 1947 ஆக.,15ம் தேதி சுதந்திரம் பெற்றது. அரசியல் சாசனம் தொடர்ச்சி, 16ம் பக்கம் அமலுக்கு வந்த நாள், 1950 ஜன.,26ம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, ஆண்டுதோறும் புதுடில்லியில், நம் படைகளின் வலிமையை உலகுக்கு காட்டுவதுடன், நம் நாட்டின் பாரம்பரிய கலாசார பெருமைகளை பிரதிபலிக்கும் விதமாக, நம் படைகளின் அணிவகுப்பு நடக்கும்.
அடுத்தாண்டு, குடியரசு தின விழாவில், அணிவகுப்பு மற்றும் இசை குழுக்கள் சார்ந்த நிகழ்ச்சிகளில், பெண்கள் மட்டும் பங்கேற்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவம் மற்ணும் பிற துறைகளில், பெண்களுக்கு அதிகாரமளிப்பது மற்றும் அவர்களுக்கான, பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இது குறித்து, அரசு துறைகள் மற்றும் ஆயுதபடைகளுக்கும், உள்துறை, கலாசாரம் மற்றும் நகர்ப்புற மே்மபாட்டு அமைச்சகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement