மதுரை மாவட்டத்தில் மூன்று மாத கர்ப்பிணி மனைவியை கணவர் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் சாந்தக்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (33). இவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ரம்யா (22) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவர்கள் இரண்டு பேரும் மதுரை விளாச்சேரி முனியாண்டிபுரம் பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில் 3 மாத கர்ப்பிணியாக இருந்த ரம்யாவிற்கும், சதீஷுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரம் அடைந்த சதீஷ் கர்ப்பிணி ரம்யாவை அடித்துக் கொன்றுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார் பிரம்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கர்ப்பிணி மனைவியை அடித்துக்கொன்ற சதீஷை கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.