சாக்லெட் வாங்கித்தருவதாக கூறி 4 வயது சிறுமியை 81 வயது முதியவர் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் மால்டா அருகே கஜோல் என்ற பகுதியில் பங்கின் சந்திர ராய் (81) என்ற முதியவர் தனியே வசித்து வந்தார். அவர் வீட்டின் அருகே 4 வயது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர் வீட்டின் உள்ளே இருந்தனர்.
அப்போது அந்த முதியவர் குழந்தையுடன் சாக்லெட் வாங்கித் தருகிறேன் தன்னுடன் வருமாறு கூறியுள்ளார். பின்னர் அந்த குழந்தை முதியவருடன் சென்றது. அப்போது அந்த முதியவர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கூட்டி சென்று, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சில மணி நேரத்துக்கு பிறகு சிறுமியை அவரது வீட்டு வாசலில் கொண்டு வந்து விட்டுள்ளார். சில நிமிடங்களிலே சிறுமி கதறி அழுதுள்ளார். பெற்றோர் விசாரித்த போது, தனது அந்தரங்க பகுதி வலிப்பதாக கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில் 81 வயது முதியவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறையில் அடைத்தனர்.
newstm.in